shadow

உதயநிதியின் படத்தில் முதல்முறையாக இணையும் ‘விவேக்’?

udayaஉதயநிதி ஸ்டாலின் நடித்த ஒருகல் ஒருகண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் ஆகிய மூன்று படங்களிலும் அவருக்கு இணையாக நடித்து கிட்டத்தட்ட இரண்டாம் ஹீரோபோல் நடித்தவர் சந்தானம். இந்த கூட்டணி உதயநிதி நடிக்கும் அனைத்து படங்களிலும் தொடரும் என அனைவரும் நினைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

உதயநிதி தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘கெத்து’ படத்தில் சந்தானத்திற்கு பதில் கருணாகரன் நடித்து வருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் பிசியாக இருந்ததால் அவர் ‘கெத்து’ படத்தில் நடிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் உதயநிதியின் அடுத்த படத்திலும் சந்தானம் நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் பெற்ற ‘ஜாலி LLB என்ற படத்தில் உதயநிதி அடுத்து நடிக்கவுள்ளார். ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உதயநிதி-விவேக் இணையும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவா-த்ரிஷா நடித்த “என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அஹ்மது இந்த படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதாரவி ஆகியோர்களும் நடிக்கின்றனர். வரும் செப்டம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Leave a Reply