shadow

தல அஜித்தின் ‘விவேகம்’ வீடியோ லீக். அதிர்ச்சி தகவல்

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தபோது, பின்னி மில் அருகே படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க மிகப்பெரிய கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடுமையான காவலையும் மீறி கட்டுக்கடங்காத கூட்டம் காம்பவுண்டு சுவரில் ஏறி நின்று தல அஜித் என்று கோஷம் போட்டனர். இதனால் படப்பிடிப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டதால் அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். சிறுத்தை சிவாவின் பிரமாண்டமான இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

//www.youtube.com/watch?v=zZOQ3b_h69g

Leave a Reply