shadow

இரவு முழுவதும் டிரெண்டில் இருந்த ‘விவேகம்’ செகண்ட் லுக்

தல அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வெளியான நிலையில் நேற்று நள்ளிரவு சரியாக 12.01 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி டுவிட்டர் இணையதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.

அஜித் ஸ்லிம் உடலமைப்பில் கையில் ஒரு ஆயுதம் வைத்து ஸ்டைலாக நின்று கொண்டிருக்கும் இந்த புதிய போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அஜித் ரசிகர்களின் இடைவிடாமல் இந்த ஸ்டில்லை ஷேர் செய்து கொண்டு வருவதால் ஒருசில மணி நேரத்தில் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் கேரக்டரின் பெயர் ‘விவேக்’ என்ற புதிய தகவலும் வெளிவந்துள்ளது. அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Leave a Reply