சென்னையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது ‘விவேகம்’
தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இந்த படம் சென்னை வசூலில் சாதனை செய்துள்ளது.
ரூ.69.75 ஒரு வாரத்தில் வசூல் செய்து முடிசூடா மன்னனாக விளங்கிய திரைப்படம் கபாலி. ஆனால் இந்த சாதனையை முறியடித்து விவேகம் ஒரு வாரத்தில் ரூ.7.14 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் இந்த படம் ‘வேதாளம்’ படத்தின் ஒருவார வசூலையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சென்னையில் ரூ.6 கோடிக்கு மேல் ஒரு வாரத்தில் இதுவரை ஐந்து படங்கள் மட்டுமே வசூல் செய்துள்ளது. அதில் விவேகம் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.