விஸ்வரூபம் 2, ரிலீஸ் எப்போது?

கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம் 2, சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகமுடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை வரும் மே மாதம் முதல் வாரத்தில் ரிலிஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அவரே களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

ரஜினி நடித்த ‘காலா’ படமும் அதே மே மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும் இரண்டு படங்களில் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply