shadow

மும்பையில் ‘விசுவாசம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு

சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் நேற்றுடன் இந்த படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்பினர்

இந்த நிலையில் ஒருசில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இந்த படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பு மும்பையில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பிற்காக மும்பையில் பிரமாண்டமான செட் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அதேபோல் மும்பை படப்பிடிப்பு முடிந்த அடுத்த ஒருசில நாட்களில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. டி.இமான் இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply