shadow

‘விஸ்வரூபம் 2’ சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல்ஹாசன் நடித்து, இயக்கி ,தயாரித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளீயாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், நிகழ்ச்சியின் இறுதியில் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply