shadow

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ரிலீஸ் தேதி?

vishwaroopamஉலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் அவர் சென்னை திரும்பவுள்ளதாகவும், சென்னையில் அவர் ‘விஸ்வரூபம் 2′ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளை கவனிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. விஸ்வரூபம் 2’ படத்தின் பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் அவர் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்புகளை தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.

‘விஸ்வரூபம் 2’ படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்புகளும் ஒருசில போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் மட்டுமே பாக்கியுள்ளது. ஒரு மாத காலம் கமல் இந்த பணியில் ஈடுபட்டால் இந்த படம் தயாராகிவிடும் என்றும் இந்த படத்தை அவர் தீபாவளி திருநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தீபாவளி தினத்தில் ‘தூங்காவனம்’ படம் வெளிவந்த நிலையில் இந்த வருடம் ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும் என்றும் அதே நேரத்தில் 2017ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் ‘சபாஷ் நாயுடு’ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply