விஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

அஜித்தின் ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் மீண்டும் அஜித் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர் விக்ரம் பத்ரா. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 24 வயதிலேயே வீர மரணம் அடைந்த இவருடைய வாழ்க்கையைத்தான் படமாக எடுக்கப் போகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க இருப்பதாகவும், இந்த பட்த்தை தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவஸ்தவா, படத்தின் கதையை எழுதியுள்ளார். அடுத்த வருடம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *