முதன்முதலாக ஜோடி சேரும் விஷ்ணுவிஷால்-தமன்னா

நடிகர் விஷ்ணுவிஷால் நடித்து தயாரித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதில் இருந்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது ‘கதாநாயகன், சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காமெடி படமான Pelli Choopulu என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் விஷ்ணுவிஷால், தமன்னா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். விஷ்ணுவிஷால், தமன்னா முதல்முறையாக ஜோடி சேரும் இந்த படத்தை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கவுள்ளார். செந்தில் வீராச்சாமி இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *