shadow

விஷால்-மிஷ்மின் ‘துப்பாறிவாளன்’ படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

vishalவிஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கி வரும் ‘கத்திச்சண்டை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் விஷாலின் அடுத்த படம்தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

‘கத்திச்சண்டை’ படத்திற்கு பின்னர் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் ‘துப்பறிவாளன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் என மிஷ்கின் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முதல்முறையாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார். பசங்க, பிசாசு படடங்களுக்கு இசையமைத்த அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இவர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கின்றது

Leave a Reply