shadow

திருடனுக்கு ஜோடியாகிறார் தமன்னா.

Tamanna-Kanden-Kadhalai-38விஷால் நடித்த மருது’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ மற்றும் சுராஜ் இயக்கத்தில் ‘கத்திச்சண்டை’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷால் நடிக்கவிருக்கும் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தில் விஷால் திருடனாக நடித்திருந்த நிலையில் மீண்டும் ‘கத்திச்சண்டை’ படத்தில் அவர் திருடனாக நடிக்கவுள்ளதாகவும், ஆனால் இந்த படத்தில் அவர் ஹைடெக் திருடனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஷாலின் திருடன் கேரக்டருக்கு ஜோடி சேருகிறார் தமன்னா. மேலும் வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக ரீஎண்ட்ரி ஆகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளதாகவும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply