விஷால் உடம்புக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டுவீட்

நடிகர் விஷாலின் உடல்நிலை சரியில்லாததால் அவர் முதலில் டெல்லி மருத்துவமனையிலும் அதன் பின்னர் கலிபோர்னியா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் விஷால் தன்னுடைய உடல்நிலை குறித்த தகவலுடன் கூடிய டுவீட் ஒன்றை பதிவு செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

அவர் தனது டுவீட்டில் கூறியிருப்பதாவது: “நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனது உடல் நிலை குறித்தும் வதந்திகள் பரவி வருகின்றன. எனது நலம் விரும்பிகள், நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் நான் நலமுடன் இருக்கிறேன். ஆரோக்கியத்துடனும், உற்சாகமாகவும் இருக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்படவில்லை. சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மார்ச் முதல் வாரத்தில் உங்களை சந்திப்பேன்.” என்று பதிவு செய்துள்ளார்.

விஷால் நடித்த இரும்புத்திரை மிக விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *