விஷாலுடன் கத்திச்சண்டையை தொடங்கினார் தமன்னா.
vishal
படிக்காதவன், அலெக்ஸ்பாண்டியன், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் ‘கத்திச்சண்டை. இந்த படத்தில் முதன்முதலாக விஷால் மற்றும் தமன்னா ஜோடி சேரவுள்ளனர்.

இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதை தமன்னா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

தமன்னா தனது டுவிட்டரில் First day of shoot of my new film with @VishalKOfficial #Suraaj #Vadivelu sir , I think , it’s going to be a super fun !!!!! என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் காமெடியனாக களமிறங்கியுள்ளார். வடிவேலுக்கும் தமன்னாவுக்கும் இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘தில்லாலங்கடி’ படத்தில் வடிவேலுவை தமன்னா காதலிப்பது போன்று நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *