shadow

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் அதிரடி நீக்கம்.

vishalதயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் திரு.விஷால் அவர்கள் கடந்த 17.08.2016 அன்று ஆனந்த விகடன் வார இதழில் அளித்த பேட்டி சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது. மேலும் இதுபோல் தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்து கொண்டதை குறிப்பிட்டு, அவருக்கு கடந்த 02.09.2013 அன்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில், 12.11.2016 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில், திருப்தியாக அமையாத பட்சத்தில் செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி, சங்கவிதி எண் 14-Dயில் உள்ளபடி M/s Vishal Film Factory நிறுவனத்தின் உரிமையாளர் திரு.விஷால் அவர்கள் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் (14.11.2016) தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply