shadow

‘மருது’ கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் விஷால் காயம்
marudhu1
பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த ‘கதகளி’ திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் விஷாலின் அடுத்த படமான ‘மருது’ விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் கிளைமாக்ஸ் உள்பட பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஒருசில பேட்ச்வொர்க் மட்டுமே பெண்டிங் உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ‘மருது’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பின்போது திடீரென விஷாலுக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் அந்த காயத்திற்கு படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவர் வைத்தியம் பார்த்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘கொம்பன்’ இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Chennai Today News: Vishal injured in Marudhu Climax

Leave a Reply