ஜனவரி 26ல் விஷாலின் அடுத்த படம் ரிலீஸ்!

விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘வீரமே வாகை சூடு’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஷாலின் எனிமி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் தொடர்ச்சியாக அவருடைய அடுத்த படமும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்