shadow

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நடிகர் விஷால் செல்லமே என்ற திரைப்படத்தில் கடந்த 2004ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமானார். அதனை அடுத்து அவர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, சத்யம், தோரணை, அவன் இவன், வெடி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் தற்போது அவர் எனிமி, துப்பறிவாளன் 2 மற்றும் விஷால் 31 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஷால் தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் மட்டுமின்றி விஷால் ஒரு சில படங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டது நடிகர் விஷாலுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருவதை அடுத்து நம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்