விஷாலுடன் முதல்முறையாக மோதும் விஜய் ஆண்டனி


vishal-vijayவிஷால், தமன்னா நடித்த ‘கத்திச்சண்டை’ திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் விஷாலுக்கு நெருக்கமான கார்த்தியின் ‘காஷ்மோரா’ ரிலீஸ் ஆவதால் நண்பனுக்காக தன்னுடைய ‘கத்திச்சண்டையை’ விஷால் நவம்பர் 18க்கு தள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் இதே நவம்பர் 18ஆம் தேதி விஜய் ஆண்டனி தனது ‘சைத்தான்’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியின் முந்தைய படமான ‘பிச்சைக்காரன்’ தமிழிலும் தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆனதால் இந்த படம் ஒரே நாளில் இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.

விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், மீரா கிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *