shadow

‘டெம்பர்’ ரீமேக்கில் விஷாலும், சிம்புவும் இல்லை.
vishal
சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் காஜல் அகர்வால் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த ரீமேக் படத்தில் சிம்பு நடிப்பதாகவும் முதலில் தகவல்கள் வெளிவந்தன.

பின்னர் சிம்பு நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் தற்போது இந்த ரீமேக் படத்தில் விஷாலும் நடிக்கவில்லையாம். விஷாலின் பி.ஆர்.ஓ இதுகுறித்து விளக்கமளித்தபோது, ‘இப்போதைக்கு விஷால் ‘துப்பறிவாளன்’ படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘டெம்பர்’ ரீமேக்கில் அவர் நடிப்பதாக வந்தூள்ள செய்தியில் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த படத்தின் ரீமேக்கில் யார்? நடிக்கின்றனர் என்பது குறித்து உறுதியான செய்தி இதுவரை வெளிவரவில்லை.

Leave a Reply