shadow

ஒரே நாளில் 100 நரிகளை வேட்டையாடினாரா? பிரபல கால்பந்து வீரரின் டுவிட்டரால் பரபரப்பு

முன்னாள் கால்பந்து வீரரும், ஹாலிவுட் நடிகரும், வேட்டை பிரியருமான வின்னி ஜோன்ஸ் என்பவரின் டுவிட்டரில் ஒரே நாளில் நூறு நரிகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக ஒரு டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இறந்த நரிகளை வரிசையாக படுக்க வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர்கள் வின்னி ஜோன்ஸை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தனர்.

இந்தநிலையில் வின்னிஜோன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் 100 நரிகளை மொத்தமாக பார்த்ததே இல்லை. வேண்டும் என்றே யாரோ என் அக்கவுண்டை ஹேக் செய்து இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர். இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply