அஜித்தை குடும்பத்துடன் சந்தித்த பிரபல நடிகர்

பிரபல மலையாள நடிகர் வினீத் சீனிவாசன் ஒரு தீவிர ரஜினி ரசிகர். இருப்பினும் அவருக்கு அஜித் படம் என்றால் மிகவும் பிடிக்கும். ரஜினிக்கும் அஜித்துக்கும் ரசிகராக இருந்து வரும் இவர் சமீபத்தில் அஜித்தை குடும்பத்துடன் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்

இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து “அற்புதமான ரசிக தருணம் இது. என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் இது எனக்கு எத்தனை முக்கியமான நிகழ்வு என்று’ என பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார் வினீத் சீனிவாசன்.

அதுமட்டுமல்ல, அஜித்தை பதினெட்டு வருடங்களுக்கு முன் அதாவது 2௦௦௦-த்தில் முதன்முதலாக சந்தித்தபோது தன்னுடன் பேசியதை இப்போதும் மறக்காமல் அஜித் நினைவுபடுத்தியது தன்னை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டுசென்று விட்டதாகவும் வினித் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *