shadow

இப்பதான் அவர் பிசியா இல்லையே? ஆஜராக வேண்டியதானே!! விஜயகாந்துக்கு நீதிபதி கண்டிப்பு

vijayakanthதேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் அவதூறு வழக்கு ஒன்றில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த நிலையில் “முன்புதான் விஜயகாந்த் பிசியாக இருந்தார். இப்போது என்ன ? சென்னையில் இருந்து கிளம்பினால் மூன்று மணி நேரத்தில் விழுப்புரம் வந்துவிடலாம். அவர்கள் நேரில் ஆஜராகமாட்டார்களா?” என்று விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி சரோஜினிதேவி கண்டிப்புடன் கூறியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் விமர்சித்தும் அவதூறாகவும் பேசியதாக அரசு வழக்கறிஞர் பொன்.சிவா விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த், பிரேமல்தா, பார்த்தசாரதி ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணைகளுக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இழுத்தடித்து வந்த விஜயகாந்துக்கு கடந்த ஜூலை 26ஆம் தேதி நீதிபதி கண்டிப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் இருவரும் ஆஜராகாததால் இருவரையும் கண்டித்த நீதிபதி இந்த வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து, அன்றைய தினம் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply