shadow

1028600-795x532

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில், மேலும் ஒரு பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, வில்லியனூரில் தருமபால சோழனால் கட்டப்பட்ட, நூற்றாண்டு பழமையான கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்த கடந்த 2012 ம் ஆண்டு பாலாலயம் செய்து, பொதுப்பணித்துறை மேற்பார்வையில் ரூ. 11, 55 கோடியில் திருப்பணி நடந்து வருகிறது. கோயில் உள்ள பிரகாரத்தில் பதிக்கப்பட்ட பழைய கருங்கற்கள் அகற்றப்பட்டு, புதிய கருங்கல் தரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 29ம் தேதி மூலவர் சன்னதிக்கு பின்புறம் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ அம்பாள் சுவாமி) சன்னிதியின் தரைத்தளத்தை பெயர்த்தபோது, ஐந்து அடி ஆழத்தில், 10-8 அடி நீள, அகலத்தில் ரகசிய பாதாள அறை இருந்து கண்டுபிடிக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று காலை 10:30 மணியளவில் கோயில் மூலவர் சன்னதிக்கு வடக்கே உள்ள முருகன் சன்னதியில், தரையை பெயர்த்தபோது, மூலவர் சிலைக்கு அடி பகுதியில் 8 -4  நீள, அகலத்தில் , 6 அடி உயரம் கொண்ட ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்குப்பட்டது. முழுவதுமாக கருங்கற்களால் ஆன இந்த பாதாள அறையின் உள்ளே இருந்த சுவரில் மீன் கொடி, வினாயகர் சிற்பம், சிறிய விளக்கு ஏற்றும் மாடம் இருந்தது. தகவலறிந்த சப் கலெக்டர் ராஜமாணிக்கம், தாசில்தார் சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், கோயில் சிறப்பு அதிகாரி மனோகரன் உள்ளிட்டோர், பாதாள அறையை பார்வையிட்டனர். கோயிலில் இரு பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், திருக்காமீஸ்வரர் மற்றும் கோகிலாம்பிகை சன்னதியிலும் பாதாள அறைகள் இருக்க வாய்ப்புள்ளது. என்றும், அதில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்கலாம் என ஊர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply