shadow

விஷாலின் ‘வில்லன்’ டிரைலர் வெளியீடு

விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்கள் முடிவடையவுள்ளதை அடுத்து அவர் விரைவில் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்கவுள்ளார்

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் ‘வில்லன்’ படத்தில் வில்லனாக விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளர்.

ரஜினியின் ‘லிங்கா’ படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன்லால், விஷால், மஞ்சுவாரியர், ஹன்சிகா, சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply