shadow

கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம்?

சீயான் விக்ரம் தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ என்றா படத்திலும், விஜய்சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிட்ப்புகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தாலும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் அடுத்து இயக்குனர் ஹரி இயக்கும் ‘சாமி 2’ படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படம் விக்ரம் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விக்ரமிடம் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒன்லைன் கதையை கூறியுள்ளதாகவும், இந்த கதை விக்ரமுக்கு பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறபப்டுகிறது.

விக்ரம், கே.வி.ஆனந்த் முதல்முறையாக கைகோர்க்க உள்ளதால் இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply