shadow

திமுக தலைவர் கருணாநிதியின் சொந்தக்காரர் ஆகிறார் சீயான் விக்ரம்

karunanidhiவித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதன் மூலம் தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த அன்பை பெற்ற சீயான் விக்ரம் விரைவில் திமுக தலைவர் மு.கருணாநிதியின் உறவினராக மாறவுள்ளார். ஆம், அவரது ஒரே மகள் அக்ஷிதாவுக்கு அவர் பார்த்துள்ள மாப்பிள்ளை கருணாநிதியின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தனது மகளுக்கு பார்த்துள்ள மாப்பிள்ளை மானு ரஞ்சித் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள்வயிற்று பேரன் என்றும் மானு ரஞ்சித் கருணாநிதிக்கு கொள்ளுப்பேரன் உறவு என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

மானு ரஞ்சித்-அக்ஷிதாவின் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூலை 10ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும், இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Vikram will be the relative to Karunanidhi soon

Leave a Reply