பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான ‘ஓ மை காட்’ என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் நடிகர் வெங்கடேஷ். இந்த படத்தில் நடிகர் அக்சயகுமார் நடித்த கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க சீயான் விக்ரம் நடிக்க விரும்பி அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் வெங்கடேஷ். ஆனால் விக்ரம் கடவுள் வேடத்தில் நடிக்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹிட்களை கொடுத்துவந்த வெங்கடேஷுக்கு இது சோதனையான காலம். சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘ஷேடோ‘, ‘மசாலா‘ என 2 ஆகிய இரண்டு படங்களும் ஓடவில்லை. எனவே சரிந்துபோன தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக இந்த படத்தை தானெ தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

விக்ரம் மறுக்கும் பட்சத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவிடம் அணுக உள்ளாராம் வெங்கடேஷ். இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். அஞ்சலி ஏற்கனவே வெங்கடேஷுடன் ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே சிட்டு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

 

Leave a Reply