vikram-prabhus-film-droppedஹரிதாஸ் படத்தை இயக்கிய இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார். அதற்கான முதல்கட்ட வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படப்பிடிப்பு முடிந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த ஜெயராஜ் ஜெயின், திடீரென இந்த படத்தை கைவிட்டுவிட்டதாக கூறினார். இந்த படத்தின் பட்ஜெட் தான் எதிர்பார்த்ததை விட அதிகமாகிக்கொண்டு வருவதாகவும், விக்ரம் பிரபுவின் மார்க்கெட்டை நம்பி இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்பவில்லை என்றும் கூறிய தயாரிப்பாளர் வேறு முன்னணி நடிகரை வைத்து தயாரிப்பதாக இருந்தால் படத்தை தொடரலாம் என இயக்குனரிடம் கூறிவிட்டார். விக்ரம் பிரபு நடித்து சமீபத்தில் வெளியான “இவன் வேற மாதிரி” படம் பெரும் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இயக்குனர் வேறு நடிகரை வைத்து இந்த படத்தை தான் இயக்கவில்லை என்று கூறியதால் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் கதையை வேறு ஒரு தயாரிப்பாளரிடம் கூறி ஒப்புதல் பெற்றுவிட்டதாக இயக்குனர் குமரவேலன் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *