கோப்ரா ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விக்ரமின் 12 லுக்? ஒரு ஆச்சரிய தகவல்

சியான் விக்ரம் நடித்து முடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

‘கோப்ரா’ படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் என தெரிகிறது

மேலும் கோப்ரா திரைப்படத்தில் விக்ரம் 12 கெட்டப்புகளில் நடித்து உள்ளதாகவும் இந்த 12 கெட்டப்களும் ஃபர்ஸ்ட் லுக்கில் இருக்கும் என்றும் ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது இதனால் விக்ரம் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். இதுவரை சிவாஜி கணேசன் 9 வேடங்களிலும் கமலஹாசன் 10 வேடங்களில் மட்டுமே நடித்துள்ள நிலையில் இருவரின் மிஞ்சிய வகையில் விக்ரம் 12 வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply