shadow

அஜித் இடத்தை ஆறே மாதங்களில் பிடித்த விக்ரம்

தமிழ் சினிமாவுலகில் ரஜினியை அடுத்து அதிக ரசிகர் பட்டாளங்களை வைத்துள்ளவர் அஜித் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அவருடைய இடத்தை இன்னொருவர் பிடிப்பது என்பது இப்போதைக்கு முடியாத ஒன்றாகவே கருதப்படுகிறது

இந்த நிலையில் அஜித் இடத்தை ஆறே மாதங்களில் விக்ரம் பிடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், அஜித் நடித்து வந்த படமான ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் ஆறு மாதம் கழித்து தற்போது விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதுவரை ஷங்கரின் கண்களில் கூட தென்படாத பல ஆச்சரியப்படத்தக்க லொகேஷன்கள் பெல்ஜியத்தில் இருப்பதாவும், இந்த விஷயம் விவேகம்’ படக்குழுவினர்களால் தற்போது கோலிவுட்டில் பரவியதை அடுத்து ‘துருவ நட்சத்திரம்’ படக்குழுவினர் பெல்ஜியம் சென்றுள்ளனர். இந்த இரு படங்களை அடுத்து இன்னும் அதிகளவில் பெல்ஜியத்தில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு அதிகம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply