கமல், விக்ரம், அக்சராஹாசன் இணையும் புதிய படம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்ரம் மற்றும் அக்சராஹாசன் நடிக்கும் படம் ஒன்று உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ‘தூங்காவனம்’ இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் கெளரவ வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் குறித்து கமல் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:

திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts