விஜய்க்கு நண்பர்கள் தரும் தவறான அறிவுரைகள். திடுக்கிடும் தகவல்
review
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதும், இதனால் படத்தின் வசூல் வெகுவாக குறைந்து விஜய் படங்களிலேயே பெரிய பிளாப் படம் இதுதான் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர் விஜய்தான் என்பது பலருக்கு தெரிந்ததே. இதனால் முழுக்க முழுக்க இந்த படத்தின் நஷ்டம் விஜய்யை பெரிய அளவில் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘புலி’ படத்தால் விஜய் தனக்கு ஏற்பட்ட பண நஷ்டத்தைவிட மோசமான விமர்சனம் காரணமாகவே அதிகம் கவலைப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வழக்கம் போல ஆக்ஷன் படங்களில், பஞ்ச் வசனங்கள், பாட்டு, டான்ஸ், சண்டைக்காட்சிகள் என நடிக்காமல் தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்துவிட்டதாக பலர் கருத்து கூறி வருகின்றனர்.

விஜய் தான் செய்த தவறை தற்போது உணர்ந்துள்ள நிலையில் அவரை மேலும் உசுப்பேற்றும் விதமாக ஒருசில திரையுலகினர், விஜய் ‘புலி’ மாதிரி படங்களில் இன்னும் அதிக நடிக்க வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர். விஜய்க்கு அறிவுரை கூறுவதுபோல் தெரிந்தாலும், உண்மையில் விஜய்யை ஒரேயடியாக ஒழித்துக்கட்டவே அவர்கள் சதிசெய்வதாக கூறப்படுகிறது. அந்த அறிவுரைகளை கூறியவர்களில் ஒருவர் பிரபல இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *