vishnuvardhanநான் எனது வாழ்நாளில் பார்த்த மிக மோசமான படம் விஜய் படம்தான் என அஜித்தை வைத்து இரண்டு படங்கள் இயக்கிய பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன், தான் பார்த்த மிக மோசமான படம் என்று ஏ.எல்.விஜய் இயக்கிய “சைவம்” படத்தை குறிப்பிட்டார். இந்த படத்தை பார்க்கும்போது தனக்கு மிகவும் போர் அடித்ததாக அவர் கூறினார்.

இவ்வளவுக்கும் சைவம் திரைப்படம் குடும்ப ஆடியன்ஸ்களையும் குழந்தைகளையும் கவர்ந்த படம் என்று ஊடகங்கள் விமர்சனம் செய்திருந்தன. ஒரு சக இயக்குனரின் படத்தை மிக மோசமான படம் என்று விஷ்ணுவர்தன் விமர்சித்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விஷ்ணுவர்தன் அஜீத் நடித்த பில்லா 2, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *