shadow

[ecp code=”bannerad”]

vijay fatherஇளையதளபதி விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மிகப்பெரிய இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவரது இயக்கத்தில்தான் விஜய்யின் ஆரம்பகால திரைப்படங்கள் வெளிவந்தன.

அதன்பின்னர் விஜய் வெளி இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்ற பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் திரைpபடங்களை இயக்குவதை குறைத்துக்கொண்டார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஏ.சி ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்குவது மட்டுமின்றி 75 வயது முதியவர் வேடத்தில் அவர் நடிக்கவும் செய்துள்ளார்.

டூரிங் டாக்கீஸ் என்ற இந்த படத்தில் மூன்று கதைகள் உள்ளன. அதில் ஒரு கதையில்  75 வயது கிழவர் ஒருவருக்கு வரும் காதல் உணர்வுகள் குறித்து கூறப்படுகிறது. இந்த கேரக்டரில்தான் எஸ்.ஏ.சி நடித்துள்ளார்.

இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[ecp code=”bannerad”]

Leave a Reply