shadow

விஜய்க்கு எதிராக குவிந்த கோலிவுட். ‘பைரவா’ வசூல் பாதிக்குமா?

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘பைரவா’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பெரும் போட்டியின்றி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட கோலிவுட்டின் முக்கிய படங்கள் அனைத்தும் ‘பைரவாவுக்கு போட்டியாக கிளம்பியுள்ளது.

டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக வேண்டிய சூர்யாவின் ‘எஸ் 3’ திரைப்படம் முதலில் பைரவாவுக்கு போட்டியாக ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.

எஸ் 3′ படத்தை தொடர்ந்து தற்போது மேலும் 4 படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவை ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’, கலையரசன் நடித்த ‘அதே கண்கள்’, அருண்விஜய் நடித்த ‘குற்றம் 23’ மற்றும் காமெடி படமான ‘எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய  படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.

ஒரே நாளில் ஐந்து படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் ஒதுக்கப்படுவதில் சிக்கல் ஏற்படுவதோடு வசூலும் ஒரே படத்திற்கு குவியாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply