shadow

‘விஜய் 59’ படத்தின் பர்ஸ்ட் லுக்-டைட்டில் வெளியாகும் தேதி

vijay59இயக்குனர் அட்லி இயக்கி வரும் இளையதளபதி விஜய் நடிக்கும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் 26ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இயக்குனர் அட்லி, தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்கள் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் டுவிட்டரில் #Vijay59FLFromNov26 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை இந்திய அளவில் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் விஜய் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஒரு பாடல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலை சமீபத்தில் ‘சைவம்’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்ற உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply