சட்டப்பேரவையில் இருந்து அநாகரீகமாக வெளியேற்றிவிட்டனர். விஜயதாரிணி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அவைக்காவலர்களால் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரிணி அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது சட்டப்பேரவையில் நடவடிக்கை எடுத்தது குறித்து சபாநாயகர் தனபால் விளக்கமளித்தபோது, ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக இன்று பேசவேண்டுமென இன்று காலை தான் விஜயதரணி கோரிக்க விடுத்தார். மற்றொரு நாள் அனுமதி தருவதாக நான் கூறினேன். ஆனால் அதை ஏற்காமல் விஜயதரணி தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னை கடுமையாக பேசினார். அதனால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் தன்னை பெண் என்றும் பாராமல் அநாகரீமான முறையில் வெளியேற்றியதாக விஜயதாரிணி எம்.எல்.ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *