shadow

விஜயகாந்த் பட டைட்டிலில் விக்ரம்பிரபு

விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்துக்காக விஜயகாந்த் பட தலைப்பை பெற்றுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘முடிசூடா மன்னன்’ என்ற படத்தில் விக்ரம்பிரபு நடித்து வந்தார். இந்த படத்தில் அச்சம் என்பது மடமையடா நாயகி மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ‘சத்ரியன்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், வெங்கட் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Leave a Reply