shadow

தொழிலதிபர் மகளுடன் விஜயகாந்தின் மகன் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்

தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு உள்ளது

இதனை அடுத்து இரு வீட்டார் கலந்துகொண்ட பூ வைக்கும் நிகழ்ச்சி நேற்று கோவையில் உள்ள சிங்காரநல்லூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ், மணமகன் விஜய பிரபாகரன் உள்பட விஜயகாந்த் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர். இருப்பினும் உடல்நிலை காரணமாக விஜயகாந்த் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது

பூ வைக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதாகவும், விரைவில் இரு வீட்டார் இணைந்து திருமண தேதியை நிச்சயித்து அதன் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் விஜயகாந்த் உறவினர்கள் தெரிவித்தனர்

விஜயகாந்த் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *