shadow

போட்டி பொதுக்குழுவை முறியடித்தார் விஜயகாந்த்
vijayakanth3
மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த சந்திரகுமார் உள்ளிட்ட ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நாளை தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூடும் அதே நேரத்தில் போட்டி பொதுக்குழுவை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த முயற்சியை விஜயகாந்த் முறியடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை சமாதானப்படுத்த தானே களமிறங்கிய விஜயகாந்த், அனைத்து அதிருப்தி நிர்வாகிகளிடம் தானே போனில் பேசினாராம்.

ரசிகர் மன்றத்தில் இருந்த உங்களை இன்றைக்கு மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. ஆக்கியுள்ளேன். உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது எப்படி என்று எனக்கு தெரியும். அதிமுக ஆசை வார்த்தைக் கூறியதால் அவர்கள் பின்னால் சென்ற 9 பேரில் 7 பேர் நிலை என்னவானது என்பதை நன்றாக அறிவீர்கள். ஆகவே, யார் பின்னாலும் சென்று ஏமாற வேண்டாம் என்று விஜயகாந்த் மனமுறுக பேசியதை அடுத்து அதிருப்தி நிர்வாகிகள் பலர் மனம் மாறிவிட்டதாகவும்,  இதனால், சந்திரகுமார் தரப்புடன் தொடர்பில் இருந்த பலர் தற்போது அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த போட்டி பொதுக்குழு ரத்தாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரகுமார் கூறியபோது, ” பொதுக்குழுவை கூட்டுகிற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. அதிருப்தி நிர்வாகிகளை வரும் 10-ம் தேதி கூட்டி ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப் பேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply