shadow

விஜயகாந்தின் அரசியல் சரியில்லை. ராதிகா கருத்து
radhika
தேமுதிக மாநாடு சமீபத்தில் நடைபெற்றபோது மிகவும் தெள்ளத்தெளிவாக பேசியவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்கள்தான். அதிமுகவை, திமுகவை விமர்சனம் செய்து மக்களுக்கு புரியும்படி ஒவ்வொரு பாயிண்டாக விளக்கமாக பேசினார். அவருடைய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அவருக்கு நேரெதிராக விஜயகாந்த் பேசினார். அதாவது அவர் பேசியது ஒன்றுமே புரியவில்லை என்று பத்திரிகையாளர்களே புலம்பி சென்றனர். ஒரு கோர்வையில்லாமல், சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் அவர் பேசிய பேச்சு பத்திரிகையாளர்களை மட்டுமின்றி தேமுதிக தொண்டர்களையும் சோதித்தது.

இந்நிலையில் விஜயகாந்த் பேச்சு குறித்து சரத்குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகாவிடம் பத்திரிகையாளர்கள் சமீபத்தில் கேட்டபோது அவர் கூறிய பதில் இதுதான்: விஜயகாந்துடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்யும் மனப்பான்மை உடையவர் அவர். ஆனால்,அரசியல் என்பது வேறு ஒரு களம். ஒரு வாக்காளராக இருந்துபார்க்கும் போது, விஜயகாந்த் அரசியல் செய்வது சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. காஞ்சிபுரம் மாநாட்டில் அவர் பேசியதை முழுமையாக படித்தேன். அவர் என்ன பேசினார் என்பது அவருக்குத்தான் தெரியும். எனக்குத்தான் புரியவில்லையோ என்று நினைத்து என் வீட்டுக்காரர் சரத்குமாரிடம் கொடுத்தேன். அவரும் படித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சிரித்துவிட்டார்’ என்று கூறினார்.

கிட்டத்தட்ட அனைவருடைய கருத்தும் இதுதான். விஜயகாந்த் நல்ல மனிதர், உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அரசியல் செய்யும் அளவிற்கு, ஒருவேளை ஆட்சியை பிடித்தால் நிர்வாகம் செய்யும் அளவிற்கு அவருக்கு திறமை உள்ளதா? என்பது கேள்விக்குறியே….

Leave a Reply