shadow

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் உடல் பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார்

இந்த நிலையில் துபாய் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் தமிழ் திரைப்படம் ஒன்றை பார்த்ததாக டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

விஜயகாந்த் நடித்த ’சத்ரியன்’ என்ற படத்தைதான் விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் பார்த்தார்

விஜயகாந்த் உடன் துபாய் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களும் ’சத்ரியன்’ படத்தை பார்த்துள்ளனர்

இதுகுறித்து விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ என்று பதிவு செய்துள்ளார்.