Thursday, August 13, 2015 1:15 pm 0 141
மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விஜயகாந்த் உண்ணாவிரதம்.
பூரண மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை ஒன்பது மணியில் இருந்து ஐந்து மணி வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள், பொதுமக்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த உண்ணாவிரதம் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த 6ஆம் தேதி சென்னையில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தி கைதான விஜயகாத் இன்று தனது அடுத்த கட்ட போராட்டமான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Leave a Reply