shadow

vijayakanth brotherதே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்தின் தம்பியான பால்ராஜ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்துவந்த பால்ராஜ் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் அந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னிலையில் தனது மனைவி வெங்கடலட்சுமியுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

சமீபகாலமாக சற்று உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் பால்ராஜ இன்று மதியம் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மதுரை செல்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply