shadow

vijayakanthதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக புதுச்சேரியில் யாரை ஆதரிப்பது என்பதில் குழப்பம் இருந்து வருகிறது. பாமக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவில் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிடுவதால், இரண்டு கட்சி வேட்பாளர்களும், விஜயகாந்த்தின் கொடி மற்றும் படங்களை வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி  தேமுதிக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த குழப்பம் காரணாமாகத்தான் விஜயகாந்த் புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்ய போகவில்லை.  மேலும் எந்த கட்சியை ஆதரித்தாலும் கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்பதால் தேமுதிக அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளையும் தேமுதிக ஆதரிக்காது என்றும், இரண்டு கட்சி வேட்பாளர்களின் விஜயகாந்த் படங்கள் மற்றும் தேமுதிக கொடியை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிக்கை ஒன்றை தேமுதிக தலைமை கழகம் இன்று விடுத்துள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாமக ஆகியவைகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Leave a Reply