shadow

அஜித் அல்லது விஜய்யை இழுக்க பாஜக திட்டமா?
vijay and modi
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் அனைத்தும் கூட்டணி குறித்த சிந்தனையில் இருக்கும்போது தேசிய கட்சியான பாஜக மட்டும் கோலிவுட் திரையுலக பிரபலங்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதல்கட்டமாக இன்று இயக்குனர் விசு பாஜகவில் இணைந்துள்ளதாகவும் இன்னும் ஒருசிலரை இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே அரசியல் பாதைக்கு செல்ல மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் பாஜக, அடுத்ததாக விஜய் மற்றும் அஜித்துக்கு வலைவீசி வருவதாக கூறப்படுகிறது.

அஜித்துக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்பதால் அவர் பாஜகவில் சேர்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்ற நிலையில் விஜய்க்கு பாஜகவில் ஒரு முக்கிய பொறுப்பை கொடுப்பதாக கூறி கட்சிக்குள் இழுக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், இதற்கு விஜய் தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. விஜய் பாஜவில் இணைந்தால் தமிழக பாஜக தலைவர் உள்பட ஏதாவது ஒரு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ajith and vijay puli vijay vijay vijay pulivijay vijay59 vijay vijay and coke

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *