shadow

 

vijay and ajithஅஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் பல சாதனைகள படைத்து வருகிறது. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை அஜீத் ரசிகர்கள் கடந்த இரண்டு வாரங்களாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இரண்டு வாரங்களாக என்னை அறிந்தால் படத்தின் டிரெண்ட் டுவிட்டரில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த டுவிட்டர் டிரெண்டை பொங்கல் வரை விடாமல் கொண்டு செல்ல அஜீத் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கு தகுந்தாற்போல் இன்னும் இரண்டு நாட்களில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வீடியோ பாடல் ஒன்றை அறிமுகப்படுத்த கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார். அனேகமாக புதன் அல்லது வியாழக்கிழமை சிங்கிள் சாங் வீடியோ வெளிவரும் என தெரிகிறது. எனவே டுவிட்டரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் அஜீத் ரசிகர்களை கட்டுப்படுத்த விஜய் அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

விஜய் தற்போது நடித்து வரும் ‘விஜய்58’ படத்தின் டைட்டிலை மிக விரைவில் அறிவிக்கவிருக்கின்றார். இந்த அறிவிப்பு டுவிட்டரில் அஜீத் ரசிகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் என விஜய் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. மேலும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தினத்தன்று விஜய் 58 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அஜீத்தின் டுவிட்டர் டிரெண்டை கட்டுபடுத்த விஜய் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை பலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பிரபல வீடியோக்களின் பட்டியலில் என்னை அறிந்தால் டீசர் சேர்ந்துள்ளதாகவும், அந்த பட்டியலில் என்னை அறிந்தால் டீசர் வீடியோ 74வது இடத்தை பிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Reply