shadow

rajathandhiramஅறிமுக இயக்குனர் ஏ.ஜி.அமித் இயக்கவிருக்கும் ‘ராஜதந்திரம்’ படத்திற்காக அடுத்தடுத்து ஏழு டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த டீசர்கள் அனைத்தையும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, சமந்தா, கிருஷ்ணா உள்பட ஏழு டீசர்கள் இதுவரை வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலரும் இன்று டுவிட்டரில் வெளியிடப்படுகிறது. இந்த டீசரை இளையதளபதி விஜய் இன்று வெளியிட உள்ளார்.

அமித் இயக்கும் இந்த படத்தில் வீரா, ரெஜினா ஆகியோர் நடிக்கவுள்ளனர். வீரா ஏற்கனவே கவுதம் மேனனின் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் தலைப்புக்கேற்றவாறே தந்திரமாக விளம்பரம் செய்து வருகிறார் இயக்குனர் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படம் 2015 பிப்ரவரியில் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply