அரசியல் அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக டுவிட்டர் மூலம் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவர் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, ‘எனது அனைத்துத் தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறினார்.

இதனையடுத்து விஜய்யை தனது கட்சியில் சேருமாறு மறைமுகமாக அழைப்பு விடுத்ததாக செய்திகள் பரவின. இந்த நிலையில் கமல்ஹாசனை விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. செல்போன் குறுந்தகவல் மூலமாகவும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய் ‘தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாராம்.

கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக அரசியலில் விஜய் களமிறங்குவார் என ஒரு யூகம் கிளம்பியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் வருகைக்கு அடித்தளம் போட்டார் விஜய். ஆனால் சில அரசியல் நிர்ப்பந்தங்களால் அவர் நடிக்கும் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த முடிவை தள்ளிவைத்தார்.

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *